வெள்ளி, 31 மே, 2013

விதி

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.
கோ 

அவள் தனது ஒன்றரை வயது பட்சிளம் குழந்தையை தனது முதுகில் அவள் சேலையால்  கட்டிக் கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள் .

சிக்னலில் வந்து நிற்கும் ஒவ்வொரு வாகனமாக சென்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.அவள் அழுக்கு துணிகளில் இருந்து வரும் வாடையை கண்டு சிலர் முகம் சுளித்துக் கொண்டாலும்,சிலர் அவள் முதுகில் துவண்டு கிடந்த பச்சை குழந்தையை பார்த்து இரக்கப்பட்டு பிச்சைப் போட்டார்கள்.

கால் கடுக்கக் ஓடி ஓடி பிச்சை எடுத்தாலும் அன்று அவளுக்கு சொற்பமான வருமானமே கிடைத்தது.அந்த சில்லறையை எடுத்துக் கொண்டு சாலையோர டீ கடையில் தனது குழந்தைக்கு மட்டும் பாலும் பட்டர் பிஸ்கட் டும் வாங்கிக் கொண்டாள்.

பசியில் வாடிக் கிடந்த தனது குழந்தைக்கு அந்த பிஸ்கட்டு பொட்டலத்தை பிரித்து அதை பாலில் தோய்த்து ஊட்டினாள்.அதை ஆர்வமாக சாப்பிட்ட குழந்தை கண் அயர்ந்தது.

குழந்தையின் பசியை போக்கிய திருப்தியுடன் அருகில் இருந்த தெரு குழாயில் தண்ணிர் குடித்துவிட்டு வந்து தனது குழந்தையின் அருகில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

மறுநாள் செய்திதாளில் : "அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் துங்கிக் கொண்டிருந்த தாயும் சேயும் பலி"

----------------------------முற்றும் -------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...